Tuesday, 30 July 2019

DYEING AUXILIARIES





ROLE AND FUNCTION OF DYEING ASSISTANCE
(DYEING AUXILIARIES)
Dyeing  ற்க்கு உதவியாக இருக்கக்கூடிய chemicals, salts போன்றவை dyeing auxiliaries என்று அழைக்கப்படுகின்றன. அவை 

Ø WETTING AGENT
Ø EXHAUSTING AGENT
Ø LEVELING AGENT (RETARDING AGENT)
Ø DISPERSING AGENT
Ø FIXING AGENT
Ø WASHING AGENT
Ø STRIPPING AGENT

WETTING AGENT
wetting agent என்பது பொதுவாக எல்லா pretreatment மற்றும் dyeing process களிலும் add செய்யப்படும் solution. இதனால் fabricக்கு  absorption (நீரை உறிஞ்சும் தன்மை)  அதிகரிக்கிறது. fabric ன் surface ல்  water நன்கு penetrate ஆகுமாறு செய்விக்கிறது. இந்த wetting agents நான்கு வகைப்படும்.

Ø Anionic wetting agent
Ø Cationic wetting agent
Ø Non ionic wetting agent
Ø Amphoteric wetting agent

EXHAUSTING AGENT (ELECTROLYTE)
Exhausting agent ஆனது dyeing molecule + ˗˗ அல்லது fibre molecule + ˗˗ என்று alternate ஆக இருக்க வைத்து dye molecule fibre க்குள் கொண்டு செல்கிறது (diffusion process) அதாவது நன்கு dyeing ஆக வேண்டும் என்றால் exhausting agent தேவை
பொதுவாக  exhausting agent ஆக Nacl மற்றும் glauber salt போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. Exhausting agent electrolyte எனவும் அழைக்கப்படும்.  




LEVELING AGENT (RETARDING AGENT)

Levelling agent use செய்வதால் uneven dyeing தடுக்கப்படுகிறது. Fabric surface ல் எல்லா இடங்களிலும் ஒரே சீராக dyeing நடைபெற levelling agent பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக wool மற்றும் சில man made fibre களுக்கு levelling agents use செய்யப்படுகிறது. ஒரு சிலர் இதை retarding agent என்று அழைப்பது உண்டு

ஆனால் ஒருசிலர் retarding agent என்பது dye fibre ல் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் விரைவில் diffusion ஆகி fix ஆவதும் ஒருசில இடங்களில் diffusion and fixing ற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது எனவும் இந்த uneven diffusion சீராக இருக்க retarding agent சேர்க்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார்கள்

DISPERSING AGENT

நீரில் கரைக்க முடியாத Insoluble dyes நீரில் கரைக்கப் பயன்படும் agents dispersing agent எனப்படும். vat dye கரைக்க hydrose; disperse dye கரைக்க dispersing agent போன்ற agent கள் use செய்யப்படுகின்றன.    



FIXING AGENT

Fixing agent dye fabric ல் fix ஆக பயன்படுகிறது. Fibre molecule னுள் dye புகுந்த பிறகு மீண்டும் அதை வெளியே வராதவாறு lock செய்வது dye fix எனப்படும். இதற்காக பயன்படும் agent fixing agent எனப்படும். ஒவ்வொரு வகையான dye க்கும் fixing agent மாறுபடும்.

fixation agent சேர்க்கையில் fibre க்கும் dye molecule க்கும் இடையே வினைபாடு ஏற்பட்டு புதிய சில chemical bond களையும் உண்டாக்குகிறது

Fixation agent example 

COTTON – Reactive Dye – Na2 Co3 – Covalent bond
WOOL & SILK – Basic & Acid dyes – Fixing agent – Ionic bond


WASHING AGENT
Pretreatment அல்லது dyeing என cloth ஆனது ஒவ்வொரு chemical process க்கு உட்படுத்திய பிறகு கண்டிப்பாக washing செய்யப்பட வேண்டும். அப்பொழுது soap solution washing agent ஆக பயன்படுத்தப்பட்டு residual dyes and residual chemicals துணியிலிருந்து நீக்கப்படுகின்றது.   

STRIPPING AGENT
Stripping agent என்பது துணியில் fix அகி உள்ள dye molecule மீண்டும் துணியில் இருந்து வெளியே கொண்டுவர பயன்படும் agent ஆகும். Dyeing இல் ஏதாவது mistake செய்து விட்டால் colour மாற்றி dyeing செய்து விட்டால் இதை சரிசெய்ய  stripping agent மூலம் colour துணியிலிருந்து நீக்கப்பட்டு சரியான colour dyeing செய்யப்படும். இதுபோன்ற over shade dye mistake நீக்க stripping agent பயன்படுத்தப் படுகிறது. 


EXMAPLE






SAND BLASTING


SAND BLASTING

          



















Saturday, 20 July 2019

TEXTILE - Colour theory


INTRODUCTION TO COLOUR THEORY



Colour theory என்பது நாம் கண்ணால் காணும் அனைத்து பொருள்களின் நிறத்தை வெளிப்படுத்தும் ஒளியின் wave length ஆகும்ஒவ்வொரு பொருளும் தன் மீது படும் ஒளியை வெளிப்படுத்தும் (அல்லது) பிரதிபலிக்கச்செய்யும் அளவில் மாறுபடுகின்றன. அந்த மாறுபடும் விகிதம் தான் அந்த பொருளின் உண்மை நிறம் அல்லது original colour எனப்படுகிறது.

ஒவ்வொரு பொருளின் நிறமும் அதன் wave length சார்ந்துள்ளது 
Ex. RED, ORANGE, YELLOW, GREEN, BLUE, VIOLET..etc

WAVE LENGTH
·      ஒரு colour ஆனது வெளிச்சத்தை எந்த அளவு absorb செய்கிறது அல்லது reflect செய்கிறது என்பதை பொறுத்து colour ன் purity அல்லது original தன்மை அமைகிறது
·  colour ன் original தன்மையை கண்டறிய அதன் wave length கொண்டே அளக்கப்படுகிறது. இதற்க்கு spectrophoto meter என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.  
·      colour ன் wave length என்பது






Classification of colours

1.     Primary colours
2.     Secondary colours
3.     Tertiary colours
4.     And other colour categories

Ø Hue
Ø Intensity
Ø Value (Tint and shade)
Ø Colour scheme and family

PRIMARY COLOURS

There are three primary colours
1. RED
2. BLUE
3. YELLOW

All colours are made out of these three colours, so it’s called primary colours. 



SECONDARY COLOURS
இரண்டு primary colour களை ஒன்றுடன் ஒன்று கலந்து பெறப்படும் புதிய colour களுக்கு secondary colours என்று பெயர். அதாவது primary colours ஆன (red + yellow) சேர்க்கப்பட்டால் அது orange நிறத்தை தோற்றுவிக்கும் இந்த orange secondary colour எனப்படும். அதேபோல் (yellow + blue) சேர்ந்தால் green நிறமும்; (blue + red) சேர்ந்தால் violet (purple) நிறமும் கிடைக்கும். மூன்று primary colours combination-களில் மூன்று புதிய நிறங்கள் (orange, green, violet)  தோற்றுவிக்கப்படுகின்றன இவையே secondary colours என்று அழைக்கப்படுகின்றன.    

v SECONDARY COLOURS:
1.     ORANGE = (red + yellow)
2.     GREEN = (yellow + blue)

3.     VIOLET (PURPLE) = (blue + red)

TERTIARY COLOURS
ஒரு primary colour ம் ஒரு secondary colour ம் சேர்ந்து கிடைக்கும் புதிய colour, tertiary colour எனப்படும்இங்கு ஆறு colour combination களைக் கொண்டு புதிய ஆறு colour கள் உருவாக்கப்படுகின்றன.  




HUE (original colour)
நிறத்தின் உண்மையான wave length குறிப்பிடப்படுவது  hue எனப்படும். எந்த ஒரு நிறமும் அதன் wavelength பொறுத்து அதற்க்கு  yellow, green, pink என பெயரிடப்படுகிறது. அந்த நிறத்தின் original wave length hue எனப்படும். wavelength சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் colour-ல் பெரிய மாற்றம் ஏற்படும். எனவே hue value colour க்கு முக்கியமான அளவீடாகும்.        



INTENSITY
Intensity என்பது ஒரு dark thick colour ன்  உண்மையான hue (original colour) ஆகும். இந்த thick colour களின் wavelength மாற்றி DGJHஅமைத்து அதன் colour லேயே வேறு shade colour அடைய (brightness or  dullness உருவாக்க) அந்த colour உடன் white அல்லது grey colour add செய்யப்படும். இவ்வாறு உண்மையான colour ன் அடர்த்தியை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும்Intensity அதிகரிப்பதன் மூலம் colour ன் brightness ம் அதிகரிக்கும்.


VALUE (TINT AND SHADE)

VALUE என்பது ஒரு colour ன் lightness அல்லது darkness குறிப்பதாகும். ஒரு colour க்கு lightness வேணுமெனில் அந்த colour க்கு white tone அதிகரிக்க வேண்டும்ஒரு colour க்கு darkness வேணுமெனில் அந்த colour க்கு black tone அதிகரிக்க வேண்டும்.   

TINT என்பது colour ன் whiteness value வை குறிப்பதாகும். ஒரு colour க்கு whiteness shade அதிகரிக்க அதிகரிக்க அதன் colour lightness ஆகிக்கொண்டே போகும் இதுவே tint எனப்படும்
Ex : rose is tint of pink, skyblue is tint of royal blue.     

SHADE  என்பது colour ன் darkness value வை (near black in value) குறிப்பதாகும். ஒரு colour க்கு darkness shade அதிகரிக்க அதிகரிக்க அதன் colour shade darkness அதிகம் ஆகிக்கொண்டே போகும் இதுவே shade எனப்படும்.

Ex : blue is shade of navy blue , red is shade of maroon.     



Definition of dyes and pigments
Dyes என்பது colour incredients ஆகும், இது textile substrate ஆன  fibres, yarn and fabric போன்றவற்றின் surface ல் fix செய்வதாகும். Dye என்று குறிப்பிடப்படும் இந்த colouring matters துணியின் lifetime முழுவதும் நீங்காமல் நீடித்து இருக்கும். இது பொதுவாக powder form களில் இருக்கும். நீரில் கலந்து துணியில் apply ஆகும்.    

pigment என்பவை paste form ல் உள்ள colouring matters ஆகும். இவை fabric surface மீது printing செய்ய பயன்படுத்தப்படுகின்றது. இது readymade ஆகவும் கிடைக்கிறது. dye, binder, thickener ஆகியவற்றைக் கொண்டு நாம் pigment உருவாக்கிக்கொள்ளவும் முடியும்.       

ESSENTIAL PROPERTIES OF DYE

·         Dye மிக எளிதாக நீரில் கரைய வேண்டும்.
·         Small quantity of dyes போதுமான அளவு நல்ல shade தர வேண்டும்.
·         Dyeing ஆன பின்பு துணியை விட்டு எளிதில் அகலக்கூடாது, அதாவது dyeing fastness நன்றாக இருக்க வேண்டும்
·         Rubbing fastness, wash fastness, light fastness என அனைத்திலும் good ஆக இருக்க வேண்டும்.
·         Cloth ல் uneven dyeing ஏற்படுத்த கூடாது.
·         Dye cost குறைவாகவே இருக்க வேண்டும்
·         Wide range of colour group களைக் கொண்டிருக்க வேண்டும்.   
·         மிக அதிக அளவு விஷத்தன்மை உள்ள banned செய்யப்பட்ட 22 amines உடைய dye ஆக இருக்க கூடாது.  
·         Eco label dye ஆக இருக்க வேண்டும்.
·         Perspiration, pestisides, acid and alkali ஆகியவை துணியில் பட்டாலும் நன்கு எதிர்த்து உழைக்க வேண்டும்.   

·         Dye ன் molecules fibre molecule ன் strength யும்  அல்லது வேறு எதாவது fibre property யும்  பாதித்துவிடக்கூடாது